எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுர அரசுக்கு எதிரான பேரணியில் தாம் பங்கேற்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்தப் பேரணியில் பங்கேற்காததற்கான இரண்டு காரணங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ கூறியதாவது:
“தினமும் தங்காலையில் என்னைச் சந்திக்க வரும் மக்களைத் தவறவிட முடியாது. மேலும் தங்காலையிலிருந்து நுகேகொடைக்கு வருவதற்கு அதிக நேரம் பிடிக்கும். எனவே அந்தப் பேரணியில் நான் பங்கேற்க இயலாது,” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
“அரசுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பேரணிக்கு எனக்கெதிர்ப்பு இல்லை. இது நடைபெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனினும், நான் பங்கேற்காததை சிலர் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும்,” என்றார்.
இதேவேளை, அந்த அரச எதிர்ப்புப் பேரணியில் மக்களைத் திரட்டும் நோக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சமீபத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளார்









