Home / அரசியல் / கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

கிராமங்களில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வகுப்பதற்காக, கிராம மட்ட அலுவலர்களுடன் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் கடந்த மாதம் 14ஆம் திகதி ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், கிராம மட்டத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைகள், அவற்றை விரைவாக தீர்வு காண்வதற்கான நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்கள், நிர்வாக செயல்பாடுகள், மற்றும் அரசின் புதிய கொள்கை முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் இடர்பாடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இவ்விவாதத்தின் தொடர்ச்சியாக, மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல்களை மாவட்டச் செயலகத்தில் தொடர்ந்து நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *