Home / கல்வி / துருக்கிய ராணுவ விமானம் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

துருக்கிய ராணுவ விமானம் விபத்து: 20 பேர் உயிரிழப்பு

அஜர்பைஜானில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த துருக்கிய ராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 20 பேரும் உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

C-130 வகை ராணுவ சரக்கு விமானமான இது, துருக்கிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்த தகவல் வெளியாகியதையடுத்து, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *